சென்னாவரத்தில் அதிமுக சார்பில் நல உதவிகள்: எம்எல்ஏ தூசி மோகன் வழங்கினார்

வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னாவரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், 690 பேருக்கு நல உதவிகளை செய்யாறு தொகுதி எம்எல்ஏ
தூசி கே.மோகன் வழங்கினார்.

சென்னாவரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலர் லோகேஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் டி.வி.பச்சையப்பன், அர்ஜுனன், கல்விக்குழுத் தலைவர் எ.விஜய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சென்னாவரம் ஊராட்சிச் செயலர் அன்னபூரணி விஜய் வரவேற்றார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் சிறப்புரை ஆற்றினார்.

மேலும், 690 பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை அவர் வழங்கினார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா, முன்னாள் தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *